UAE Tamil Web

வெடித்துச் சிதறிய டயர் ; கவிழ்ந்த கார் : காவல்துறை வெளியிட்ட வீடியோ..!

accident

மோசமான நிலையிலுள்ள டயர்களுடன் காரை இயக்குவது மிக மோசமான விபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது.

தேய்ந்த அல்லது சேதமடைந்த டயருடன் காரை இயக்குவது குற்றமாகும். இதற்கு 500 திர்ஹம்ஸ் அபராதமும் 4 கரும்புள்ளிகளும் மற்றும் வாகனம் ஒருவாரத்திற்கு சிறைபிடிக்கப்படும் எனவும் வீடியோ மூலமாக அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது.

தேய்மானமடைந்த டயர்களினால் வேகமாகச் செல்லும் கார்கள் சாலையில் விபத்திற்கு உள்ளாகும் வீடியோ ஒன்றினை அபுதாபி காவல்துறை வெளியிட்டுள்ளது.

டயர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதை வாகனவோட்டிகள் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது. இதன்மூலம் கோடைக்காலங்களில் வெப்பநிலை உயர்வினால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

accident
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap