உம் அல் குவைன் காவல்துறையில் புதிய போலீசாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது டிடெக்டிவ் ரோபோடோக். 3 வருட சிறப்பு பயிற்சிகளுக்குப் பிறகு போலீசாக பதவியேற்கும் இந்த ரோபோ குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் என அந்த எமிரேட் காவல்துறை தெரிவித்துள்ளது.
எக்ஸ்போ 2020 ஐ முன்னிட்டு, உம் அல் குவைன் ஸ்மார்ட் கவர்மெண்ட் மற்றும் உம் அல் குவைன் காவல்துறை இணைந்து இந்த ரோபா உருவாக்கத்தை மேற்கொண்டுள்ளனர்.
உம் அல் குவைன் காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷேக் ரஷீத் பின் அகமது அல் முவல்லா, இப்புதிய ரோபோ போலீசுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
View this post on Instagram
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதில் தேர்ச்சி பெற்ற இந்த ரோபோ அக்டோபர் 3 ஆம் தேதி காவல்துறையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
