UAE Tamil Web

வீடியோ: ஒரே மாதத்தில் 100 கோடி திர்ஹம்ஸ் வருமானம் – மகிழ்ச்சி தெரிவித்த துபாய் ஆட்சியாளர்..!

His-Highness-Sheikh-Mohammed-Bin-Rashid-Al-Maktoum--Vice-President-and-Prime-Minister-of-the-UAE-and-Ruler-of-Dubai_

அமீரகத்தின் பிரத்யேக சுற்றுலாத் தளங்களை உள்நாட்டு மக்கள் தரிசிக்கும் நோக்கத்தில் துவங்கப்பட்ட வேர்ல்ட்ஸ் கூலஸ்ட் விண்டர் (World’s Coolest Winter) திட்டம் முடிவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

கடந்த டிசம்பர் 12, 2020 ஆம் தேதி துவங்கப்பட்ட இந்தத் திட்டத்தினால் கிடைத்த நன்மைகள் குறித்து அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

950,000 சுற்றுலா வாசிகள் அமீரகத்தின் பல இடங்களைப் பார்வையிட்டுள்ளனர். இதன்மூலம் அரசுக்கு 100 கோடி திர்ஹம்ஸ் வருமானம் கிடைத்திருக்கிறது.

“சுமார் 2,000 சமூக வலைப் பதிவுகள் இத்திட்டம் குறித்து இடப்பட்டுள்ளன. அமீரகத்தின் அழகியலை வெளிக்கொணரும் விதமாக எடுக்கப்பட்ட வீடியோக்களை 215 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்” என ஆட்சியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை உலகம் முழுவதிலும் உள்ள 20 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.

அடுத்த திட்டம்

அடுத்தாண்டு டிசம்பர் 15, 2021 ஆம் தேதி பிக்கர் & பெட்டர் கேம்பைன் (bigger and better campaign) குளிர்கால சுற்றுலாத் திட்டம் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பொருளாதாரத்துறை, அமீரக அரசு ஊடகங்கள் மற்றும் உள்ளூர் சுற்றுலா நிறுவனங்களுக்கு துபாய் ஆட்சியாளர் நன்றி தெரிவித்திருக்கிறார்.

எமிரேட்ஸ் டூரிசம் அப்ளிகேஷன்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கு அமீரகம் முழுவதிலும் உள்ள 600 சுற்றுலா மையங்களை அணுகுவது பற்றியும் அவை குறித்த தெளிவான தகவல்களை வழங்கவும் இந்த எமிரேட்ஸ் டூரிசம் அப்ளிகேஷன் உதவும். உணவகங்கள், சுற்றுலா தளங்களில் 72,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள 275 ஆஃபர்களையும் இந்த ஆப் மூலமாகப் பெறலாம்.