UAE Tamil Web

வீடியோ: மறைந்த ஷேக்கா ஷம்சாவிற்காக ஜனாஸா தொழுகை (இறுதித் தொழுகை) நடத்திய ஆட்சியாளர்கள்..!

funeral prayers

உம் அல் குவைனின் முன்னாள் ஆட்சியாளரான ஷேக் ரஷீத் பின் அஹமத் அல் முவல்லா அவர்களுடைய மனைவியான ஷேக்கா ஷம்சா பின்ட் மஜீத் நேற்று காலமானார்.

1981 ஆம் ஆண்டுமுதல் 2009 ஆம் ஆண்டுவரை உம் அல் குவைனின் ஆட்சியாளராக இருந்த அஹமத் முவல்லா – ஷேக்கா ஷம்சா தம்பதிக்கு ஷேக் முகமது பின் ரஷீத், அப்துல்லா பின் ரஷீத், அலி பின் ரஷீத் மற்றும் மார்வன் அல் ரஷீத் முவல்லா என நான்கு மகன்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், மறைந்த ஷேக்கா ஷம்சாவிற்காக இன்று ஜனாஸா தொழுகை (இறுதித் தொழுகை) நடத்தப்பட்டது. இதில் உச்ச சபையின் உறுப்பினரும் ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமி, உச்ச சபையின் உறுப்பினரும் உம் அல் குவைனின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் சவுத் பின் ரஷீத் அல் முவல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தத் தொழுகையில் அஜ்மானின் பட்டத்து இளவரசர் பெருமதிப்பிற்குரிய அம்மார் பின் ஹுமைத் அல் நுவைமி, உம் அல் குவைனின் பட்டத்து இளவரசர் பெருமதிப்பிற்குரிய ஷேக் ரஷீத் பின் சவுத் பின் ரஷீத் அல் முவல்லா, ராஸ் அல் கைமாவின் பட்டத்து இளவரசர் பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சவுத் பின் சக்ர் அல் காசிமி, சகிப்புத்தன்மை மற்றும் ஒருங்கிணைந்தவாழ்வுத்துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.