UAE Tamil Web

வீடியோ: அமீரகத்தில் பொழிந்த ஆலங்கட்டி மழை – சாலைகளில் கொட்டிய பனிக் கட்டிகள்..!

Ice Rain

அமீரகத்தில் இரண்டு வாரத்தில் இரண்டாம் முறையாக ஆலங்கட்டி மழை பெய்திருக்கிறது. ஷார்ஜாவின் கல்பா பகுதியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை தேசிய வானிலை ஆய்வுமையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கல்பா மற்றும் புஜைரா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்த வீடியோவையும் தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது.


மேலும், புஜைராவின் பள்ளத்தாக்கில் மழைநீர் காட்டாறு போலப் பாயும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக தேசிய வானிலை ஆய்வுமையம் இரட்டை மஞ்சள் எச்சரிக்கையை விடுத்திருந்தது. தூசிப் புயலுக்கு ஒன்றும், கனமழைக்கு ஒன்றும் எச்சரிக்கை விடப்பட்டது.

மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டால் வெளியே செல்லும்போது பொதுமக்கள் மிககவனமாக இருக்கவேண்டும் என அர்த்தமாகும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் அமீரகத்தில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ice Rain
0 Shares
Share via
Copy link