UAE Tamil Web

“துபாய்ல வேல வாங்கித் தாரேன்னுட்டு கவுத்துட்டிங்களேடா”.. புலம்பும் நீயா நானா கோபிநாத்..!

டிடி நீலகண்டன், மாகாபா ஆனந்த்-ஐ தொடர்ந்து நீயா நானா கோபிநாத்தும் துபாய்க்கு சுற்றிப்பார்க்க வந்துள்ளார்.

விஜய் டிவியில் நீயா நானா பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பல ஆண்டுகளாக ஒரே ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது என்றால் அது மிகப்பெரிய சாதனை. அதே போல, நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத்தின் உடல் மொழியும் ரசனை மிக்கவையாகும்.

இந்த நிகழ்ச்சியில் சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது மட்டுமின்றி இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிறும் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் முதல் நிகழ்ச்சி இருந்து இன்று வரை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கிறார். இவருடைய பெயரே நீயா நானா கோபிநாத் என்று மாறும் அளவுக்கு பிரபலம் வாய்ந்தவை ஆகும்.

இந்நிலையில் டிடி நீலகண்டன், மாகாபா ஆனந்த் போன்ற பல சின்னத்திரை பிரபலங்கள் அவ்வபோது அமீரகத்திற்கு வருவது வழக்கமாகி விட்டது. அது போன்று நீயா நானா கோபினாத்தும் தற்போது துபாய்க்கு வருகை தந்துள்ளார்.

துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்குத் தெருவில் கூலாக காத்துவாங்கும் விஜய் டிவியின் நீயா நானா கோபினாத்தின் நகைச்சுவையான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

https://fb.watch/bM2gvSWMqA/

அந்த வீடியோவில், “துபாயில் 20 மாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்குச் சந்தில் படுக்க வச்சி ஏமாத்திட்டீங்களேடா” என்று துபாயில் அன்றாட நடக்கூடிய சம்பவத்தை வெளிக்காட்டும் விதத்தில் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

கோபினாத்தின் இந்த விடியோவை அமீரகத்தில் பணிபுரியும் தமிழர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap