37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

UAE-இல் இந்த சட்டத்தை மீறினால் 6 மாத சிறை மற்றும் Dh100,000 வரை அபராதம்.!

அபுதாபியில் சுற்றுசூழல் பாதுகாப்பு குழு பைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சுமார் 200 கிலோ மதிப்புள்ள கடல் சிப்பிகளை கைப்பற்றியது.

சுற்றுசூழல் பாதுகாப்பு குழு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில், சிப்பிகள் ஒரு முக்கியம் வாய்ந்த இயற்க்கை வளம், அதுமட்டுமல்லாமல் கடல் வாழ் உயிரினங்களான மீன்கள் மற்றும் பறவைகளுக்கு இது முக்கியம் வாய்ந்த உணவு சங்கிலியாக பயன்படுகிறது. சமீபத்தில் நடத்திய கடத்தல் ஒழிப்பு சோதனையில் பைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சுமார் 200 கிலோ மதிப்புள்ள சிப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சிப்புகளை மீண்டும் இயற்க்கை வளங்களோடு சேர்ந்து விட்டதாக, அவர்கள் கூறினர்.

Federal Law No. 23 ( 1999) படி ஐக்கிய அரபு அமீரகத்தில் பாதுகாப்பு மற்றும் கடல் சார்ந்த வளங்களை சுரண்டுதல் சட்டப்படி குற்றமாகும். இதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் 6 மாத கால சிறை தண்டனை மற்றும் ( அல்லது) 50,000 முதல் 100,000 திரஹம் வரை அபராதம் விதிக்கப்படும், என்றும் முன்னறிவிப்பு செய்துள்ளது.

இதையும் படிங்க.!