இந்தியாவின் குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் யூடியூபில் ஒளிபரப்பு செய்யப்பட்டது, குடியரசு தின விழாவை உலகளவில் பிரபலமானதால் பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து 2.6 கோடியாக உள்ளது.
இதுகுறித்து இந்திய தகவல் – ஒலிபரப்பு துறை தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த பிரம்மாண்டமான விழாக்களை ஒளிபரப்புவதில் தூர்தர்ஷன் தான் முன்னோடி. 2022 இந்திய குடியரசு தினத்தில் விமானப் படையின் அணிவகுப்பை இதுவரை இல்லாத காட்சிகளுடன் தூர்தர்ஷன் ஒளிபரப்பி பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்துள்ளது. இந்த நிக்ழ்ச்சியை தூர்தர்ஷனில் பார்த்தோர்களின் எண்ணிக்கை 2.6 உள்ளது.
இதனால் உலகளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க குடியரசு தின நிகழ்ச்சிகளை தூர்தர்ஷனில் காண்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் அமீரகம், சவுதி அரேபியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்பட 140-க்கும் அதிகமான நாடுகளில் இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி அதிக பார்வையாளர்களை எட்டியது.
இவ்வாறு தகவல் – ஒலிபரப்பு துறை தெரிவித்தது.