இந்திய திருநாட்டின் தேசிய கீதத்தை வாசிக்கும் துபாய் போலீஸ்..!!

Dubai Diwali Celebration

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துபாய் அரசாங்கம் அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்காக தீபாவளி பண்டிகையை கொண்டாடியது. துபாயில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் இந்த கொண்டாட்டம் நடந்தது.

இந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இந்த விழாவில் துபாய் போலீசார் சார்பில் இந்திய தேசிய கீதம் பேண்ட் வாத்தியமாக வாசிக்கப்பட்டது. இது பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.