காரில் சாகசம் செய்து 67 பிளாக் புள்ளிகள் பெற்ற சிறுவன் அதிரடி கைது !

Viral video gets UAE driver arrested ( Photo Credit: Screengrab )

67 பிளாக் புள்ளிகளுடன் UAE சேர்ந்த ஓட்டுநர் வைரல் வீடியோவால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமீரகத்தை பொறுத்தவரை 24 பிளாக் புள்ளிகள் ஓட்டுநர் பெற்றுவிட்டால் அவரது ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும்.

19 வயதான சிறுவன் போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும், பொது
மக்களுக்கு ஆபத்தை விளைவித்த காரணத்திற்காகவும் 67 பிளாக் புள்ளிகள் பெற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அஜ்மான் பகுதியில் இந்த சிறுவன் நிசான் பாட்ரோல் காரை ஆபத்தான முறையில் இயக்கும் வீடியோ அமீரக வலைதள பக்கங்களில் அனைவராலும் பகிரப்பட்டது.

கண்காணிப்பு மற்றும் போக்குவத்து கட்டுப்பாடு இயக்குனர் மேஜர் Rashid Bin Hindi அவர்களின் தலைமையிலான குழு CCTV காட்சிகளை கண்காணித்து இதுபோன்ற விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்குவோரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

போக்குவரத்து விதியின்படி பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவோருக்கு 2000 திரகம் அபராதமும், 23 பிளாக் புள்ளிகள் வழங்கப்படும்.

அதே போல் கார் என்ஜினை அதிக சத்தம் எழுப்பும் படி மாற்றியமைப்போருக்கு 2000 திரகம் அபராதம் விதிக்கப்படும்.

மேஜர் Bin Hendi அவர்கள் வாகன ஒட்டிகளிடம், இது போன்ற சாகசங்களில் ஈடுபட வேண்டாம் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நிலையான தன்மையை பின்பற்ற வேண்டும் என்றும், மேலும் சமூக அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Source : Gulf News

Loading...