UAE Tamil Web

இது என்ன ரகம்னே தெரியலையே… அமீரக கடலில் மிதக்கும் “வித்தியாசமான உயிரினம்” – மக்களுக்கு ஆபத்தானதா? ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்..!

sea

உம் அல் குவைன் கடற்கரையில் வாக்கிங் சென்றுகொண்டிருந்த சிலர் கடலில் வித்தியாசமாக ஏதோ தெரிவதைப் பார்த்திருக்கிறார்கள். சிறியதாக காணப்பட்ட அவை ஏதோ அரியவகை உரினம் என்பது மட்டும் தெரிந்திருக்கிறது. இது அரசின் காதுகளை எட்டியவுடன் முழு ஆராய்ச்சியில் நிபுணர்கள் இயங்கினர்.

தேசிய காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கடல் சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தின் இயக்குனர் இப்ராஹீம் அல் ஜமாலி இதுகுறித்துப் பேசுகையில்,” இந்த உயிரினம் நத்தை வகையைச் சேர்ந்தது. இவை சிறியனவாகவும், உள்ளே இருப்பது வெளியே தெரியும் படியாகவும் இருக்கும். கடல் போன்ற பெரிய இடங்களில் அவை வசிக்கும். கடல்வாழ் சுற்றுச்சூழலில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன” என்றார்.

உணவுச் சங்கிலியில் இவற்றின் பங்கு முக்கியமானது. கடல்வாழ் உயிரினங்கள் சில இவற்றுக்கு உணவாகின்றன. அதுமட்டுமல்லாமல் சில நுண்ணியிர்கள், பைட்டோபிளாங்க்டன் மற்றும் விலங்குகளுக்கும் இவை உணவளிக்கின்றன.

மேலும் இதுகுறித்துப் பேசுகையில்,”இவை ஆபத்தில்லாதவை, நச்சுத்தன்மை இல்லாதவை. இவற்றை கூட்டமாகப் பார்க்க முடியும். கோடைக் காலங்களில் இவை கடற்கரைகளில் தென்படும். மிதக்கும் பொருட்கள் அல்லது மனிதர்களிடம் தங்களுடைய கொடுக்கின் மூலமாக ஒட்டிக்கொள்ளும் தன்மைகொண்டவை இவை” என்றார்.