பிரபல ஹாலிவுட் பிரபலமான வில் ஸ்மித் பெஸ்ட் ஷேப் ஆஃப் மை லைஃப் (Best Shape of My Life) என்னும் யூடியூப் சீரிஸை வெளியிட்டு வருகிறார். தனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த சோதனைகள், உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் ஸ்மித் அந்த சீரிஸில் விளக்குகிறார்.
துபாயைப் பற்றிப் பேசிய அவர்,”துபாய் எனது ஆளுமைக்கு ஏற்றது. நான் உலகை எப்படிப் பார்க்கிறேன், வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறேன் என்பதையே அது பேசுகிறது. நீங்கள் ஒரு கட்டிடம் கட்டப் போகிறீர்கள் என்றால், நீங்கள் உண்மையில் புர்ஜ் கலீஃபாவைக் கட்ட முயற்சிக்க மாட்டீர்களா?” எனக் கேட்டிருக்கிறார்.
தனது உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவில் அவர் ஏறியிருக்கிறார். மொத்தமுள்ள 160 தளங்களை 61 நிமிடங்களில் ஏறிக் கடந்த அவர், புர்ஜ் கலீபாவின் உச்சிக்கும் பாதுகாப்பு வசதிகளுடன் சென்றிருக்கிறார்.
வில் ஸ்மித்தின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
