UAE Tamil Web

நூற்றாண்டுகள் பழைமையான குரான்களின் கண்காட்சி ஷார்ஜாவில் துவக்கம்..!

Sherifa_

ஷார்ஜா புத்தக ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்டுவரும் பழைமையான குரான்களின் கண்காட்சி மே 3 ஆம் தேதிவரையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சிக்கு “கிழக்கிலிருந்து வரும் கதைகள் (Tales from the East)” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் ஒட்டமானிய காலத்தில் அதாவது கிபி 1827 ஆம் ஆண்டு ஹஜ் அப்தி சதே பஸாரி யாரி (Hajj Abdi Zadeh Basari Yari) அவர்களின் மகளும் புகழ்பெற்ற கையெழுத்துக் கலைஞருமான ஷெரிபா சுலைகா கதாமி அல் சாதி (Sherifa Zulaikha Khatami Al Saadi) அவர்களால் எழுதப்பட்ட குரானின் நகல் இந்தக் கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய கலை வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற கையெழுத்துக் கலைஞர்களில் ஒருவரான உமர் பின் இஸ்மாயில் எழுதிய புனித குர்ஆனின் நகலும் இக்கண்காட்சியில் இடம்பெறுகிறது. 1685 ஆம் ஆண்டு நாஸ்க் ஸ்க்ரிப்டில் எழுதப்பட்ட குரான் இது என்பது குறிப்பிடத்தக்கது. அலங்கரிக்கப்பட்ட பேனல்களில் வைக்கப்பட்டுள்ள இதைத் தொடர்ந்து சூரத் அல் அனாம் பகுதியும் இடம்பெற்றுள்ளது.

கி.பி 15 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய கையெழுத்துக் கலைஞரான ஜோன்முர்ட் பின் அகி முஹம்மது பின் பயாசித் அல் சுரூரியின் படைப்புகளின் மூலம் வரலாற்றாசிரியர்கள் திமுரிட் காலம் என விவரிப்பதை ஆராய்வதற்கு ‘Tales from the East’ கண்காட்சி பார்வையாளர்களுக்கு உதவுகிறது. துலுத் எழுத்தில் எழுதப்பட்ட இந்த கையெழுத்துப் பிரதி, அரபு கைரேகையின் பொற்காலத்தில் எழுதப்பட்டதாகும்.

“இந்தக் கண்காட்சியானது மாம்லுக் வம்சத்தின் போது சமர்கண்டிலிருந்து தொடங்கி ஒட்டோமான் பேரரசின் நகரங்கள் முழுவதும் விரிவடைந்து எகிப்து மற்றும் சிரியாவை அடைந்த புனித குர்ஆனின் கையெழுத்து பிரதிகளின் பயணத்தை மக்கள் தெரிந்துகொள்ள பொன்னான வாய்ப்பை வழங்குகிறது” என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மம்லூக் காலத்தில் எழுதப்பட்ட குரானின் அரியவகை பிரதி கண்காட்சியில் இடம்பெற்றுகிறது. கருமையான பக்கத்தில் கருப்பு மைகொண்டு எழுதப்பட்ட இந்தப் பிரதி வரலாற்றின் மிகமுக்கிய கலைப்படைபாகும். அதுமட்டுமல்லாமல் அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சரான டாக்டர் அப்துல் ரஹ்மான் அவர்களுடைய தனிப்பட்ட சேகரிப்புகளான நூற்றாண்டு பழமையான பல குரான் பிரதிகளும் இங்கே வைக்கப்பட்டுள்ளன. வாய்ப்புள்ளோர் நிச்சயம் சென்று இக்கண்காட்சியைப் பார்த்துவாருங்கள்.

Sherifa_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap