UAE Tamil Web

ஈஸியான சவால்: அமீரகத்தை சுற்றுங்க.! அதிகபட்சம் 50,000 திர்ஹம்ஸ் ரொக்க பரிசை வெல்லுங்க..

3

அமீரகத்தில் இன்று முதல் ஒரு புதிய சமூக ஊடக சவால் போட்டி துவங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கும் மேல் நடக்க உள்ள இந்த சவாலில் பங்கேற்றால் வாரம் 25,000 திர்ஹம்ஸ் ரொக்க பரிசை அள்ளி செல்லலாம்.

அமீரக துணைத் தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் தொடங்கப்பட்ட அமீரக குளிர்கால சுற்றுலா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது இந்த “உலகின் சிறந்த குளிர்கால சவால்”(#WorldsCoolestWinterChallenge).

இந்த போட்டி ஒரு மாதத்திற்கு வாரந்தோறும் 25,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள 2 ரொக்கப் பரிசுகளையும் இது தவிர போட்டியின் இறுதி கட்டத்தில் 50,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள இரு பெரிய ரொக்கப் பரிசுகளையும் வழங்க உள்ளது. டூ(du) மற்றும் அமீரக ஊடக அலுவலகத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த போட்டி, அமீரகத்தில் தங்களது வெளிப்புற அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள குடியிருப்பாளர்களை ஊக்குவிக்கிறது.

2

எதற்காக இந்த சவால்.?

இந்த சவால் உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதையும், அமீரகத்தின் முக்கிய இடங்களை குடியிருப்பாளர்கள் கண்களால் நேரடியாக கண்டு களிக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. அமீரகம் முழுவதும் சுற்றுலா, இயற்கை மற்றும் கலாச்சார அடையாளங்களின் அழகை சிறப்பாகப் சிறப்பாக படம் பிடிக்கும்  சிறந்த  ஆன்லைன் போஸ்ட்களுக்கு இந்த சவால் ரொக்க பரிசுகளை வழங்க உள்ளது.

என்ன செய்ய வேண்டும்.?

அதிகபட்சம் 50,000 திர்ஹம்ஸ் வரை ரொக்க பரிசை வெல்ல வாய்ப்புள்ள இந்த போட்டியில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பங்கேற்கலாம். அமீரகம் முழுவதும் தாங்கள் மேற்கொள்ளும் குளிர்கால நடவடிக்கைகள் அதாவது இந்த குளிர் காலத்தில் அமீரகத்தில் தாங்கள் சுற்றி பார்த்து அனுபவிக்கும் அழகிய இடங்களை கிரியேட்டிவ் இமேஜ்கள் அல்லது 1 நிமிடத்திற்கு மேல் மிகாத குறுகிய வீடியோக்களாக தயார் செய்ய வேண்டும். பின்னர் #WorldsCoolestWinterChallenge என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி இன்ஸ்டா மற்றும் ட்விட்டரில் போஸ்ட்டை ஷேர் செய்ய வேண்டும். உங்கள் படைப்பு மிக சிறப்பாக இருப்பின் ரொக்கப்பரிசை வெல்லும் வாய்ப்பை நீங்கள் பெறுவீர்கள்.

2 கட்டங்கள்..

அமீரகத்தின் இந்த உலகின் சிறந்த குளிர்கால சவால் போட்டியானது 2020, டிசம்பர் 15 (இன்று)முதல் 2021 ஜனவரி 25 வரை இரண்டு கட்டங்களாக நடக்கிறது.

  1. முதற்கட்டம் இன்று முதல் 2021 ஜனவரி 14 வரை வாரந்தோறும் 2 போஸ்ட்களுக்கு தலா 25,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள ரொக்கப் பரிசுகளை வழங்கும்.
  2. ஜனவரி 15 முதல் ஜனவரி 25 வரை 10 நாட்கள் நடைபெற உள்ள இரண்டாம் கட்டத்தில், தலா 50,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள 2 பெரிய ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சவாலின் முடிவில் du வெற்றியாளர்களின் கதைகளையும், அவர்களின் சமர்ப்பிப்புகளுக்கு ஊக்கமளித்த பயணத்தையும் வெளியிடும். இதுபற்றி பேசிய du செயல் தலைமை நிர்வாக அதிகாரி பஹத் அல் ஹசாவி, #WorldsCoolestWinterChallenge மூலம், பொதுமக்களுக்கு அவர்களின் சொந்தக் கதைகளை சொல்லவும், அமீரகத்தை அவர்களின் தனித்துவமான கண்ணோட்டத்தில் பிரதிபலிக்கவும் நாங்கள் வாய்ப்பு அளிக்கிறோம்.

1

இந்த குளிர்காலத்தில் சாகசங்களை மேற்கொள்ளவும், அமீரகத்தின் இயற்கையை ரசிக்கவும் இதன் மூலம் அழைக்கிறோம்.இந்த சவால் அமீரகத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதை, கொண்டாடுவதை நோக்கமாக கொண்டுள்ளது, அதே நேரத்தில் இந்த குளிர்காலத்தை அனுபவிப்பதை நோக்கி சமூகத்தை ஒன்றிணைத்து, புதிய ஆண்டை உற்சாகமாக வரவேற்க நேர்மறையான அதிர்வுகளை நாங்கள் பரப்புகிறோம் என்று குறிப்பிட்டார்.

3
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap