UAE Tamil Web

கொரோனாவில் இருந்து தப்பிக்க இந்த விட்டமின் அவசியம் – மருத்துவர்களின் பரிந்துரை..!

vitamins

அபுதாபி சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய விட்டமின் டி (vitamin D) அளவினை அதிகரிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை இது அளிக்கிறது. மேலும், விட்டமின் டி அதிகமாக உள்ள கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நோய்த்தொற்றின் வீரியம் விட்டமின் டி இருப்பவர்களுக்கு குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் கொரோனா நோய் தாக்கப்பட்டவர்களை ஆய்வு செய்து வெளியிடப்பட்ட புதிய அறிக்கையின் அடிப்படையில் சுகாதாரத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமீரகத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவரான டாக்டர். ஹபீபா அல் ஸஃபர் (Dr. Habiba Al Safar) மற்றும் சயீத் பல்கலைகழகத்தில் கிளினிக்கல் பையோகெமிஸ்ட்ரி பிரிவில் உதவிப் பேராசிரியராக இருக்கும் டாக்டர்.ஃபட்மே அல் அனௌடி (Dr. Fatme Al Anouti) ஆகியோர் இணைந்து இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வறிக்கையை அபுதாபி சுகாதார ஆராய்ச்சி நெறிக்குழு (Abu Dhabi Health Research aEthics Committee) அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, விட்டமின் டி உள்ள பொருட்களை எடுத்துக்கொள்வது நம்முடைய உடல்நலத்தைப் பாதுகாக்கும் என்பது தெளிவாகியிருக்கிறது. இனி, விட்டமின் டி கிடைக்கும் பொருட்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

சூரிய ஒளி உடம்பில் படுவது வைட்டமின் டி அளவை அதிகரிக்கும். உணவுப் பொருட்களில்,

  • பால்
  • காளான்
  • சாலமன் போன்ற எண்ணெய் மிகுந்த மீன்கள்
  • ஆரஞ்சுச் சாறு
  • முட்டை (மஞ்சள் கரு)
  • வெண்ணெய்

ஆகியவற்றில் விட்டமின் டி அதிகமிருக்கிறது.