UAE Tamil Web

காலாவதியான விசா புதுப்பிப்பு: குழப்பமான தகவல்களை பகிரும் vloggers.. உண்மை இது தான்

visa

தங்கள் சமூக ஊடக சேனல்களை பிரபலப்படுத்தவும், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பல vloggers, விசிட் விசா புதுப்பித்தல் சேவைகளுக்கு ஆகும் செலவு மற்றும் நடைமுறைகள் குறித்த தவறான தகவல்களை அமீரகத்தில் பரப்பி உள்ளதாக பயண முகவர்கள்(travel agents) அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மார்ச் 1-ம் தேதிக்குப் பிறகு அபுதாபி மற்றும் துபாயால் வழங்கப்பட்ட  விசிட் விசாக்களுக்கான புதுப்பித்தல் கட்டணமாக தவறான செலவுகளை சில vloggers விளம்பரப்படுத்தியுள்ளனர்.தங்கள் டிக்டாக், யூடியூப் மற்றும் இன்ன பிற சேனல்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாக நினைத்து தவறான பல தகவல்களை வீடியோவாக vloggers வெளியிட்டுள்ளதாக அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

காலாவதியான விசிட்டிங் விசா உள்ளவர்களில் யாரெல்லாம் செப்டம்பர் வரை தங்கலாம் என்பது குறித்து அறிய இங்கே கிளிக் செய்யவும்.

இது தொடர்பாக டிக்டாக்கில் தவறான தகவல்களுடன் உலா வரும் பிரபலமான பல வீடியோக்களை Khaleej Times கண்டறிந்துள்ளது. இந்த வீடியோக்களில் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் விசா புதுப்பித்தல் சலுகை காலத்தை செப்டம்பர் வரை இலவசமாக நீட்டித்துள்ளது என்றும், துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா எமிரேட்ஸில் புதுப்பித்தல் சேவைகளுக்கான கட்டணங்கள் பற்றி தவறான தகவல்களை கொண்டும் உள்ளது.
vlogs பெரும்பாலும் மலையாளம், இந்தி, உருது மற்றும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் உள்ளன. தேரா டிராவல் மற்றும் டூரிஸ்ட் ஏஜென்சி எல்.எல்.சியின் பொது மேலாளர் சுதீஷ் டி.பி. இது பற்றி கூறுகையில் “சில vloggers கூறுவது போல இலவச நீட்டிப்பு இல்லை. புதிய விசாவிற்கு விண்ணப்பிக்கவும் அல்லது நாட்டிலிருந்து வெளியேறவும் ஆகஸ்ட் 10 தான் கடைசி தேதி.

தவறான தகவல்: யூடியூபர் ஒருவர் மார்ச் 1 க்குப் பிறகு விசாக்கள் காலாவதியானவர்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 30 நாட்களையும் சேர்த்து செப்டம்பர் வரை அமீரகத்தில் பிரச்னையின்றி இருக்க முடியும், அதன் பிறகு அவர்கள் விசாக்களை புதுப்பித்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

சரியான தகவல்: 30 நாட்கள் கால நீட்டிப்பு சலுகை அபுதாபி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, இது துபாய் விசா வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது. இந்த சலுகையைபெறுவதற்கான விண்ணப்ப செயல்முறை குறித்து இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை மக்கள் vloggers சொல்வதை கேட்டு நடந்தால் அபராதம் தான் செலுத்த நேரிடும் என்றார் சுதீஷ் டி.பி.

மேலும் ஷார்ஜா, துபாய் மற்றும் அபுதாபியில் விசாக்களின் விலையில் வேறுபாடு உள்ளது. அபுதாபியில் விசா விண்ணப்பித்தால் குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகும். ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், கட்டணமாக செலுத்திய பணம் திருப்பித் தரப்பட மாட்டாது.

டிக்டாக் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நான் இன்று எனது வருகை விசாவை புதுப்பித்துள்ளேன். பல ஏஜென்சிகளை தொடர்பு கொண்டேன். அதில் மிகச் சிறந்த குறைவான விலையில் அதாவது 1,750 திர்ஹம் விலையில் ஷார்ஜாவில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து பெற்றதாக கூறியுள்ளார்.

ஸ்மார்ட் டிராவல்ஸ் இயக்குனர் அஃபி அகமது கூறுகையில், துபாயின் பொது வசிப்பிட மற்றும் வெளியுறவு இயக்குநரகம் (GDRFA) மட்டுமே, காலாவதியான விசா வைத்துள்ளவர்களின் விசா நிலையை உள்நாட்டில் நீட்டிக்க அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில் எதிஹாட் ஏர்வேஸ்(Etihad Airways) ஒரு வெளி நிறுவனத்திற்கு சிறப்பு ஒப்புதல் அளித்தது, மூன்று மாத விசிட் விசாவை 1,600 திர்ஹமுக்கு வழங்கியது, மற்ற ஏஜென்சிகள் 1,750 திர்ஹம்களுக்கு வழங்குகின்றன.

அவர் மேலும் கூறியதாவது: துபாயில், மூன்று மாத விசா புதுப்பித்தலுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் 1,834 திர்ஹம் ஆகும். விண்ணப்பக் கட்டணம்1,276 திர்ஹம், மற்றும் ஒப்புதலுக்குப் பிறகு, status-ஐ மாற்றுவதற்கு இது 558 திர்ஹம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் vloggers அபுதாபியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்களே எல்லா எமிரேட்டுகளுக்கும் பொருந்தும் என குழப்பமான தகவல்களை கூறுகின்றனர் என்றார்.

அனைத்து குழப்பங்களையும் தவிர்க்க Amer மையங்கள், GDRFA அல்லது ICAஆகியவற்றைச் சரிபார்க்கவும். பதிவுசெய்த பயண முகவர்களுடன் உங்கள் விசிட் விசாக்களை புதுப்பிக்க விரும்பினால் அவர்களை தொடர்பு கொள்வதே சிறந்த வழி. சரியான தகவலுக்காக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களை நம்புங்கள். பிரபலமான பயண முகவர் நிலையங்களுக்கு செல்வதால் குழப்பங்களை தவிர்க்கலாம். ஏஜென்சிகள் பிரீமியம் தொகை வசூலித்தாலும் நீங்கள் ஏமாற்றப்பட மாட்டீர்கள் என்று சுதீஷ் கூறினார்.error: Alert: Content is protected !!