39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

துபாய் : ரிட்டயர்மென்ட் விசாவைப் பெற எப்படி விண்ணப்பிப்பது? – படிப்படியான வழிமுறைகள்..!

Dubai Retirement visa

துபாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிட்டயர்மென்ட் விசாவினை அதிகாரிகள் அறிமுகப்படுத்தினர். 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் மற்றும் புதுப்பிக்கத்தக்க வகையில் இந்த விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 வயதான எவரும் இந்த விசாவின் மூலமாக துபாயில் தங்களது ஓய்வுக் காலத்தை களித்துக் கழிக்கலாம். சரி, இந்த விசாவினை யார் பெறலாம்? என்னென்ன தகுதிகள்? வழிமுறைகள் என்ன? என உங்களது அனைத்து கேள்விகளுக்கும் இந்தப் பதிவில் பதிலளித்திருக்கிறோம்.

ரிட்டயர்மென்ட் விசா

55 வயதான எந்நாட்டவருக்கும் இந்த விசா வழங்கப்படும். உங்களுடைய மனைவி மற்றும் குழந்தைகளையும் இந்த விசாவின் மூலமாக துபாய் அழைத்துவரலாம்.

அமீரகத்தில் செல்லுபடியாகக்கூடிய மருத்துவக் காப்பீடு அவசியம். பணி நிறைவு பெற்றவர்களுக்கான பிரத்யேக மருத்துவ காப்பீடு திட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

பொருளாதார தகுதிகள்

ரிட்டயர்மென்ட் விசாவின் மூலம் துபாய் வருவோர் கீழ்கண்ட தகுதிகளில் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

  • அமீரகத்தில் உங்களுக்கு 2 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பில் சொத்து இருக்கவேண்டும்.

அல்லது

  • அமீரகத்தில் உங்களுடைய வங்கிக்கணக்கில் 1 மில்லியம் திர்ஹம்ஸ் வைப்புத்தொகையாக இருக்கவேண்டும்.

அல்லது

  • நீங்கள் மாத வருமானமாக 20,000 திர்ஹம்ஸ் பெறுபவராக இருக்கவேண்டும். (அதற்கு சமமான வேறு நாட்டு பணத்திலும் வருமானம் இருக்கலாம்)

அல்லது

  • உங்களுடைய கையிருப்பு மற்றும் நீங்கள் வைத்திருக்கும் சொத்தின் மதிப்பு ஆகியவற்றின் கூட்டுத்தொகை குறைந்தது 2 மில்லியன் திர்ஹம்ஸ் ஆக இருக்கவேண்டும்.

வழிமுறைகள்

மேற்கண்ட தகுதிகளில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ அதற்குத் தகுந்தபடியே உங்களுக்கான விசா பெறும் நடைமுறை இருக்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த தகுதியினை பூர்த்தி செய்திருக்கிறீர்கள் என்பதற்கு சாட்சியாக ஆவணங்களை மின்னஞ்சலுடன் இணைக்கவேண்டும்.

எடுத்துக்காட்டாக நீங்கள் சொத்தின் மூலம் விசாவிற்கு விண்ணப்பிப்பவர் எனில் உங்களுடைய சொத்து பற்றிய ஆவணத்தை நீங்கள் விசா கோரி விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சலுடன் இணைத்தல் அவசியம்.

அல்லது, உங்களுடைய கையிருப்பை வைத்து விசாவிற்கு விண்ணப்பம் செய்வதாக இருந்தால் உங்களுடைய வங்கிக் கிளையிலிருந்து நீங்கள் வைத்திருக்கும் கையிருப்பை உறுதிசெய்யும் படியான கடிதத்தை மின்னஞ்சலில் இணைக்கவேண்டும்.

ஒருவேளை நீங்கள் கையிருப்பு மற்றும் சொத்து ஆகிய இரண்டையும் தகுதியாக காட்ட விரும்பினால் உங்களுடைய கடைசி ஆறு மாத பணப் பணப்பரிவர்த்தனைக்கான ஆதாரம் மற்றும் உங்களுடைய சொத்து குறித்த ஆவணத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.

உங்களுடைய கையிருப்பு மற்றும் நீங்கள் வைத்திருக்கும் சொத்தின் மதிப்பு ஆகியவற்றின் கூட்டுத்தொகை குறைந்தது 2 மில்லியன் திர்ஹம்ஸ் ஆக இருக்கவேண்டும். – என்ற தகுதியை பயன்படுத்துபவராக இருந்தால் அதற்கான ஆவணங்களையும் இணைத்தல் வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்

  • விண்ணப்பதாரர் மற்றும் (அவசியம் எனில்) அவருடைய மனைவி, குழந்தைகளின் பாஸ்போர்ட் நகல்
  • திருமண சான்றிதழ் (மனைவிக்கும் ஸ்பான்சர்ஷிப் அளிப்பதாக இருந்தால்)
  • தற்போது உள்ள விசாவின் நகல் (அமீரக குடியிருப்பாளராக இருக்கும் பட்சத்தில்)
  • எமிரேட்ஸ் ஐடியின் நகல் (அமீரக குடியிருப்பாளராக இருக்கும் பட்சத்தில்)
  • தகுதிக்கான ஆதார ஆவணங்கள் (மேலே குறிப்பிட்டவை)
  • அமீரகத்தில் செல்லுபடியாகும் மருத்துவ காப்பீடு (தேவை இருப்பின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும்)
  • தற்போதைய வசிப்பிட முகவரி (வீட்டு எண், தெரு எண், பகுதி, நகரம், நாடு)
  • தொடர்பு கொள்ள ஏதுவான மொபல் எண், மின்னஞ்சல் முகவரி.

மேற்கண்ட ஆவணங்கள் தயாரா? அப்படியானால் [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களுடைய ஆவணங்களை இணைக்கத் தவறவேண்டாம்.

உங்களுடைய கோரிக்கையை துபாய் இயற்கை வளமாக்கல் மற்றும் வசிப்பிடத்துறை (DNRD) பரிசீலனை செய்யும். நீங்கள் உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பித்த நாளில் இருந்து மூன்று நாட்களுக்குள் உங்களுடைய விசா குறித்த தகவல்கள் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு : https://www.visitdubai.com/en/sc7/retire-in-dubai

 

 

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!