வானிலை ஆய்வு மையம் – எச்சரிக்கை…!

clouds

அமீரகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஈரப்பதமான பனிமூட்டம் நிறைந்த வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

இனிவரும் ஐந்து நாட்களுக்கு ஈரப்பதமான ஓரளவு மேகமூட்டத்துடன் தூசி நிறைந்த மூடுபனி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையமாகிய NCM(The National Centre for Meteorology) தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரம்:

வெள்ளிக்கிழமை அன்று ஈரப்பதம் மற்றும் மூடுபனி கிழக்கு பகுதியில் உருவாக வாய்ப்புள்ளதாக NCM கணித்துள்ளது. வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் எனவும் வடமேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசையை நோக்கி வீசும் காற்றின் வேகம் லேசானது முதல் மிதமானதாக இருக்கும். பின்பு வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும். கடலில் பகல் நேர காற்றானது மணிக்கு 18 முதல் 28 கிமீ வேகத்தில் வீசும் எனவும் அதிகபட்சமாக 38 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

காலை நேரத்தில் மேற்கு நோக்கி வீசும் காற்று பலமாக வீசக்கூடும். அதே நேரத்தில் அரேபிய வளைகுடா பகுதியில் லேசானது முதல் மிதமானதாகவும் மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் மிதமானது முதல் லேசானதாகவும் காற்று வீசக்கூடும்.

சனிக்கிழமை நிலவரம்:

சனிக்கிழமையன்று சில பகுதிகளில் குறிப்பாக உள் பகுதிகளில் காலையில் மூடுபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது. வடமேற்கு திசையிலிருந்து வடகிழக்கு நோக்கி கடல் மேல் வீசும் காற்றானது மணிக்கு 15 முதல் 25 கிமீ வேகத்தில் வீசக்கூடும். சில நேரங்களில் அதிகபட்சமாக 38 கிமீ வரை வீசக்கூடும் வாய்ப்புள்ளது.

ஞாயிறு நிலவரம்:

வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமையை பொருத்தவரை காலையில் மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வடமேற்கு திசையிலிருந்து வடகிழக்கு நோக்கி கடல் மேல் வீசும் காற்று மணிக்கு 15 முதல் 25 கிமீ வேகத்தில் வீசக்கூடும். சில நேரங்களில் 38 கிமீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளது.

திங்கள் நிலவரம்:

திங்கள் கிழமையை பொறுத்தமட்டில் காலையில் மூடுபனி இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும். வடமேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கும் வீசும் காற்று லேசானது முதல் மிதமான வேகத்தில் இருக்கும் எனவும் கடல் மேல் வீசும் காற்று மணிக்கு 18 முதல் 28 கிமீ வரை வீசக்கூடும். அதிகப்பட்சமாக 48 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

செவ்வாய் நிலவரம்:

செவ்வாய் கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் தென்கிழக்கிலிருந்து வடகிழக்கு வரை வீசும் காற்று லேசானது முதல் மிதமான வேகத்தில் வீசக்கூடும். கடல் மேல் வீசும் காற்று மணிக்கு 15 முதல் 28 கிமீ வரை வீசக்கூடும். அதிக பட்சமாக மணிக்கு 38 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Loading...