UAE Tamil Web

அமீரக வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.. மீறினால் 1500 திர்ஹம்ஸ் அபராதம்!

அஜ்மானில் அதிகபட்ச வேக வரம்பாக மணிக்கு 60 கி.மீ-க்கு மேல் சென்றால், வாகன ஓட்டிகளுக்கு 1,500 திர்ஹம் ஸ் அபராதம் விதிக்கப்படும் என்றும் 6 பிளாக் மார்க்குகள் பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் 15 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

இதர எமிரேட்களில் உள்ள அதிகாரிகள், குறிப்பாக ரமலான் காலத்தில் வேகங்களை குறைக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

இப்தார் மற்றும் தராவீஹ் தொழுகைக்கு வேகமாகச் செல்வதால் ரமலான் மாதத்தில் போக்குவரத்து விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இது குறித்து துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொது இயக்குனர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய், “அனைத்து ஓட்டுநர்களும் கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும், குறிப்பாக விதிகளை மீறி மசூதிகளுக்கு முன்னால் வாகனத்தை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap