UAE Tamil Web

கொரோனா விழிப்புணர்வுக்காக சைக்கிளில் வலம்வந்த அபுதாபி காவல்துறையினர்..!

NAT-AD-POLICE-PIC

அபுதாபி குடியிருப்பாளர்களுக்கிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பைக்குகள் மற்றும் சைக்கிள்களில் காவல்துறையினர் பேரணி சென்றனர்.

மக்கள் அனைவரும் முகக்கவசம், கையுறை அணிதல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பூங்காக்கள், கடற்கரை மற்றும் பொது இடங்களில் உள்ள மக்களிடையே காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

ஆணையம் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில் கார்னிச் பகுதியில் ஹெல்மெட் அணிந்து அதிகாரிகள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறிப்பிடப்பட்டுள்ளது.

காரில் செல்ல முடியாத இடத்திற்கும் காவல்துறை அதிகாரிகள், சைக்கிள் வழியாக விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

NAT-AD-POLICE-PIC
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap