UAE Tamil Web

வீடியோ : 4,138 பேருக்கு அபராதம் விதித்த அபுதாபி காவல்துறை : இந்த தவறை மறுபடியும் பண்ணாதிங்க..!

Pedestrian-crossing

பாதசாரிகள் கடக்கும் இடத்தில் (zebra crossings) சாலையை கடக்கவிடாமல் காரை இயக்கும் ஓட்டுனர்களுக்கு 500 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் மேலும் 6 கரும்புள்ளிகளும் வழங்கப்படும் என அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அபுதாபி காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் எவ்வாறு பாதசாரிகளுக்கு இடமளிக்கவேண்டும் என விளக்கப்பட்டுள்ளது.

கடைசி ஆறுமாதத்தில் இந்தத் தவறைச் செய்த  4,138 வாகனவோட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அபுதாபி காவல்துறையின் போக்குவரத்து இயக்குனரகம் இந்த சிசிடிவி வீடியோவை வெளியிட்டுள்ளது. குடியிருப்பு மற்றும் இண்டஸ்ட்ரியல் பகுதிகளில் மக்கள் சாலைகளைக் கடக்கும் வேளையில் வாகனவோட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்கவேண்டும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

மேலும், சாலையை கடக்க ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே மக்கள் சாலைகளை கடக்கவேண்டும் எனவும் பிற இடங்களில் சாலையினை கடக்கும்போது விபத்தில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Pedestrian-crossing
3 Shares
Share via
Copy link