UAE Tamil Web

அபுதாபியில் வந்துவிட்டது டிரைவர் இல்லா எலெக்ட்ரிக் டாக்சிகள்..!

driverless-

அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தின் (ITC) தலைமையில் பிரபல செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான குரூப் 42 ஆகியவை இணைந்து டிரைவர் இல்லா எலெக்ட்ரிக் டாக்சி சேவையைத் துவங்க ஆயத்தமாகி வருகின்றன. இதனை TXAI என்று அழைக்கிறார்கள்.

இதன் ஆரம்ப கட்டமாக அபுதாபியின் யாஸ் தீவில் உள்ள 9 இடங்களில் 5 கார்களை இயக்கியிருக்கிறது ITC. இந்தக் காரின் மேற்பகுதியில் திசையுனர் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவால் கட்டுப்படுத்தப்படும் ஸ்மார்ட் ஜியோகிராபிகல் எகொசிஸ்டம் டிரைவர் இல்லா இந்த TXAI சேவையை மேம்படுத்துகிறது. எலெக்ட்ரிக் வகை கார் என்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடும் குறைவு.

விரைவில் அபுதாபியின் முக்கிய இடங்களில் இந்த கார்களின் இரண்டாம் கட்ட சோதனை துவங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதற்கென அப்ளிகேஷன் உருவாக்கப்படும் எனவும் பிற கார்களில் பொருத்திக்கொள்ளும் வகையில் ஹார்ட்வேர் டெக்னாலஜியை அறிமுகப்படுத்தும் திட்டமும் குரூப் 42 க்கு இருப்பதாகத் தெரிகிறது.

driverless-
0 Shares
Share via
Copy link