UAE Tamil Web

துபாய்: புத்தாண்டு இரவில் நீரில் மிதந்தபடி வான வேடிக்கைகளைக் காணலாம் – எப்படி? எங்கே?

RTA-marine-transport-NYE-fireworks-

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வரும் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற இருக்கும் வான வேடிக்கைகளை மக்கள் வித்தியாசமான முறையில் கண்டுகளித்திட புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன்படி, நீர்வழிப் போக்குவரத்துகளான துபாய் ஃபெர்ரி, வாட்டர் பஸ் மற்றும் அப்ராவில் பயணித்தபடி நீங்கள் பிரம்மாண்ட வானவேடிக்கைகளைக் கண்டுகளிக்க முடியும்.

“புர்ஜ் கலீஃபா, பெஸ்டிவல் சிட்டி, புர்ஜ் அல் அரப், அட்லாண்டிஸ், ப்ளூ வாட்டர் மற்றும் ஜுமேய்ரா வாட்டர் ஃபிரண்ட் ஆகிய இடங்களில் புத்தாண்டு துவங்கும் இரவில் நடைபெறவுள்ள வானவடிக்கைகளை மக்கள் நீர்வழிப் போக்குவரத்து மூலமாக கண்டுகளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என நீர்வழிப் போக்குவரத்தின் இயக்குனர் முகமது அபூபக்கர் அல் ஹாஷிமி தெரிவித்துள்ளார்.

நேரம்

புத்தாண்டு இரவு 10 மணிமுதல் அடுத்தநாள் காலை 1.30 மணிவரையில் துபாய் ஃபெர்ரி இயக்கப்படும்.

வாட்டர் பஸ் மற்றும் அப்ரா ஆகியவை புத்தாண்டு இரவு 10 மணிமுதல் அடுத்தநாள் காலை 1.30 மணிவரையில் துபாய் ஃபெர்ரி இயக்கப்படும்.

கட்டணம்

அப்ரா: மெரீனா மால் ஸ்டேஷனில் (துபாய் மெரீனா) இருந்து கிளம்பும் இந்தப் பயணத்திற்கு பெரியவர்களுக்கு 125 திர்ஹம்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது.

துபாய் ஃபெர்ரி : மெரீனா மால் ஸ்டேஷன் (துபாய் மெரீனா), அல் குபைபா, அல் சீஃப் (துபாய் கிரீக்) ஆகிய ஸ்டேஷன்களில் இருந்து இந்தப் பயணத்திற்கு சில்வர் கிளாசில் பயணிப்பவர்களுக்கு 300 திர்ஹம்ஸ் கட்டணமும் கோல்ட் கிளாசில் பயணிப்பவர்களுக்கு 450 திர்ஹம்ஸ் கட்டணமும் வசூலிக்கப்படும். 2 – 10 வயதுடைய குழந்தைகளுக்கு இக்கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும் எனவும் 2 வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்ரா: அல் ஜதாஃப், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி, அல் குபைபா மரைன் ஸ்டேஷன்களில் இருந்து துவங்கும் இந்தப் பயணத்திற்கு வயதானவர்களுக்கு 125 திர்ஹம்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், 2 வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது.

இதுகுறித்த கூடுதல் தகவல்களைப் பெறவும் பயணத்திற்கு முன்பதிவு செய்யவும்  8009090 என்ற இலவச எண்ணிற்கு கால் செய்யலாம் அல்லது wtbook@rta.ae என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என RTA தெரிவித்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap