UAE Tamil Web

ஒவ்வொரு எமிரேட்டிலிருந்தும் எக்ஸ்போ 2020 சிட்டிக்கு சிறப்பு பேருந்துகள் அறிமுகம் – கால அட்டவணை உள்ளே..!

Expo-Buses

துபாயில் அக்டோபர் 1 ஆம் தேதி துவங்க இருக்கும் எக்ஸ்போ 2020 திடலுக்கு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகளை துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஒதுக்கியுள்ளது.

அபுதாபி, ராஸ் அல் கைமா, ஷார்ஜா, புஜைரா, அஜ்மான் ஆகிய இடங்களில் இருந்து துபாய் எக்ஸ்போ வர மொத்தம் 70 சிறப்புப் பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வார நாட்களில் இந்த இடங்களில் இருந்து எக்ஸ்போ சிட்டிக்கு 193 ட்ரிப்களையும் வியாழன் மற்றும் வெள்ளி நாட்களில் 213 ட்ரிப்களையும் இந்த பேருந்துகள் மேற்கொள்ள இருக்கின்றன.

இதுகுறித்துப் பேசிய துபாய் RTA வின் நிர்வாக இயக்குனர் குழுவின் தலைவரும் RTA வின் தலைமை இயக்குனருமான மட்டார் முகமது அல் தயேர்,” மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் ஆகியோருக்கு சிறப்பு இருக்கைகளை கொண்டிருக்கும் இந்த Euro 6 ரக பேருந்துகள் குறைவான கார்பன் உமிழ்வை கொண்டவையாகும். அமீரகம் முழுவதிலும் உள்ள மக்கள் எளிதில் எக்ஸ்போ சிட்டிக்கு வருகைதர இந்த பேருந்துகள் உதவும்” என்றார்.

Bus-graphic-
Image Credit: Gulf News

இனி, ஒவ்வொரு எமிரேட்டிலிருந்தும் துபாய் எக்ஸ்போ சிட்டிக்கு இயக்கப்பட இருக்கும் பேருந்துகள் மற்றும் புறப்படும் இடம் குறித்துப் பார்ப்போம்.

அபுதாபி மற்றும் அல் அய்ன்

அபுதாபி விமான நிலையம்: மொத்தம் 10 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வார நாட்களில் 31 ட்ரிப் (இரு திசைகளிலும்), வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் 33 ட்ரிப் (இரு திசைகளிலும்).

அபுதாபி மெயின் பேருந்து நிலையம்: மொத்தம் 10 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வார நாட்களில் 26 ட்ரிப் (இரு திசைகளிலும்), வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் 29 ட்ரிப் (இரு திசைகளிலும்).

மெரீனா மால் ஸ்டேஷன்: மொத்தம் 10 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வார நாட்களில் 27 ட்ரிப் (இரு திசைகளிலும்), வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் 28 ட்ரிப் (இரு திசைகளிலும்).

அல் அய்ன் பேருந்து நிலையம்: மொத்தம் 9 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வார நாட்களில் 22 ட்ரிப் (இரு திசைகளிலும்), வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் 25 ட்ரிப் (இரு திசைகளிலும்).

மேற்கண்ட நான்கு நிலையங்களில் இருந்தும் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு பேருந்து என்ற வீதத்தில் இப்போக்குவரத்து திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜா

அல் ஜுபைல் பேருந்து நிலையம்: மொத்தம் 10 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வார நாட்களில் 29 ட்ரிப் (இரு திசைகளிலும்), வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் 33 ட்ரிப் (இரு திசைகளிலும்). ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு பேருந்து என்ற வீதத்தில் இப்போக்குவரத்து திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

முவெய்லே பேருந்து நிலையம்: மொத்தம் 10 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. வார நாட்களில் 32 ட்ரிப் (இரு திசைகளிலும்), வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் 37 ட்ரிப் (இரு திசைகளிலும்). ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பேருந்து என்ற வீதத்தில் இப்போக்குவரத்து திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ராஸ் அல் கைமா மற்றும் அஜ்மான்

ராஸ் அல் கைமா பேருந்து நிலையத்தில் இருந்து அஜ்மான் பேருந்து நிலையம் வழியாக எக்ஸ்போ சிட்டிக்கு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. வார நாட்களில் 17 ட்ரிப் (இரு திசைகளிலும்), வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் 18 ட்ரிப் (இரு திசைகளிலும்). ஒவ்வொரு 60 நிமிடத்திற்கும் ஒரு பேருந்து என்ற வீதத்தில் இப்போக்குவரத்து திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

புஜைரா

புஜைரா சிட்டி செண்டர் : வார நாட்களில் 9 ட்ரிப் (இரு திசைகளிலும்), வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் 10 ட்ரிப் (இரு திசைகளிலும்). ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் ஒரு பேருந்து என்ற வீதத்தில் இப்போக்குவரத்து திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

Expo-Buses
4 Shares
Share via
Copy link