துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது மறைந்த மூத்த சகோதரர் ஷேக் ரஷீத் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுடைய நினைவுநாளான இன்று உருக்கமான வீடியோ ஒன்றினை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் மூத்த மகனான ஷேக் ரஷீத் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது 33 வது வயதில் மாரடைப்பால் காலமானார்.
இதனையடுத்து ஷேக் ரஷீத்துடன் தான் இருக்கும் புகைப்படங்களை இணைத்து வீடியோ ஒன்றினை வெளியிட்டு அஞ்சலியும் செலுத்தியிருக்கிறார் துபாய் இளவரசர் ஹம்தான்.
اللهم إن رحمتك وسعت كل شيء ، فأنزل على عبدك ( راشد ) رحمة ومغفرة من عندك يا الله pic.twitter.com/HM4U3Lr5Uu
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) September 19, 2021
