UAE Tamil Web

திடீரென தீப்பிடித்து எரிந்த காய்கறி ட்ரக் ; 3 கார்கள் சேதம் – ஷார்ஜாவில் பரபரப்பு..!

Fire

ஷார்ஜாவின் கஸ்பா மேம்பாலத்திற்கு முன்னர் காய்கறி ஏற்றிச்சென்ற ட்ரக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. நேற்று நிகழ்ந்த இந்த விபத்தில் ட்ரக்கின் அருகே இருந்த 3 கார்கள் தீயினால் சேதமடைந்ததாக ஷார்ஜா சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 5 மணிக்கு இவ்விபத்து குறித்து சிவில் பாதுகாப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக சிவில் பாதுகாப்புப் படை, தேசிய ஆம்புலன்ஸ் ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது.

இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. வாகன உரிமையாளர்கள் சரியான கால இடைவெளியில் வாகனத்தை பராமரிப்பு வேலைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் வாகனத்திலேயே தீயணைப்பு கருவிகளை வைத்திருக்க வேண்டும் எனவும் சிவில் பாதுகாப்புத்துறை வலியுறுத்தியுள்ளது.

Fire
1 Share
Share via
Copy link