UAE Tamil Web

அபுதாபி இந்துக் கோவிலுக்கு இந்தியாவிலிருந்து வந்திறங்கிய 750 டன் சிற்பங்கள்..! – புகைப்படங்கள் உள்ளே..!

NAT-TEMPLE-9

அபுதாபியில் கட்டப்பட்டுவரும் பிரம்மாண்ட இந்துக் கோவிலில் வைக்கப்பட இருக்கும் சிற்பங்கள் இந்தியாவில் ஆயிரக்கணக்கான சிற்பிகளால் செதுக்கப்பட்டுவந்தன. இந்நிலையில் அவற்றின் முதற் தொகுதி அபுதாபிக்கு வந்திறங்கியுள்ளன.

40 கண்டெய்னர்களில் சுமார் 750 டன் எடையுள்ள இந்த பிங்க் கற்களால் செய்யப்பட்ட சிற்பங்கள் கோவில் அமைந்துள்ள அபு முரெய்கா (Abu Mureikha) பகுதிக்கு வந்தடைந்துள்ளன. அடுத்த ஆண்டுகளில் மீதியுள்ள கற்களும் அமீரகம் வரும் எனத் தெரிவிக்கப்படுள்ளது.

NAT-TEMPLE23
Image Credit: Gulf News

கோவில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடும் BAPS குழுமத்தின் பிரதிநிதி போச்சஸன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயன் சான்ஸ்தா இதுகுறித்துப் பேசுகையில்,”கடந்தவாரம் கோவிலின் அடித்தளம் அமைக்கும் பணி 5 மீட்டர் உயரத்தை எட்டியது. இன்னும் சில மாதங்களில் துவங்க இருக்கும் துபாய் எக்ஸ்போ 2020 ஐ காணவரும் நபர்கள் கோவிலில் தரைத் தளத்தைப் பார்வையிட முடியும்” என்றார்.

TEMPLE-9
Image Credit: Gluf News

கோவிலில் இடம்பெற இருக்கும் சிற்பங்கள் இந்தியாவில் சுமார் 2000 சிற்பிகளைக் கொண்டு செதுக்கப்பட்டுவருகின்றன. அடுத்தடுத்த வருடங்களில் அவை அபுதாபி வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவில் கட்டுமானப் பணிகள் 2023 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபுதாபியில் கட்டப்பட்டுவரும் இந்த கோவில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

சமீபத்தில் கோவிலுக்கு மணற்கற்கள் பொருத்தும் பணிகளை அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் மற்றும் இந்தியத் தூதரகத்தின் அதிகாரிகள் கோவில் கட்டுமானப் பணிகளை சமீபத்தில் பார்வையிட்டனர்.

TEMPLE-91
Image Credit: Gulf News
NAT-TEMPLE-9
3 Shares
Share via
Copy link
Powered by Social Snap