UAE Tamil Web

வீடியோ: துபாய் இளவரசரை சந்திக்க நெடுநேரம் காத்திருந்த ஊனமுற்ற நபர் – ஓடிச்சென்று கட்டிப்பிடித்த துபாய் இளவரசர்..!

Hamdan

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இன்று வழக்கம்போல தனது காரில் ஏறச் செல்லும்போது மாற்றுத் திறனாளி ஒருவர் அவரை சந்திக்கக் காத்திருப்பதை அறிந்திருக்கிறார்.

ஹம்தானின் உதவியாளர் ஒருவர், மாற்றுத்திறனாளி ஒருவர் உங்களை சந்திக்க விருப்பப்படுகிறார் எனத் தெரிவித்ததும் உடனடியாக திரும்பிப் பார்த்த ஹம்தான், தூரத்தில் காத்திருந்த மாற்றுத் திறனாளியை நோக்கிச் சென்றிருக்கிறார்.

அவரைக் கட்டியணைத்த இளவரசர் கிண்டலாக,” என்னைச் சந்திக்க விருப்பம் இல்லையென்று சொன்னீர்களாமே” எனக் கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த அந்நபர்,” நான் அப்படிக் கூறவில்லை, உங்களைப் பார்த்து ஹாய் சொல்லவே காத்திருந்தேன்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Hamdan
5 Shares
Share via
Copy link