UAE Tamil Web

வீடியோ: அமீரகத்தில் தட்டி வீசும் மழை – ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை மையம்..!

rain video

இன்றோடு 2021 ஆம் ஆண்டு முடிவடைகிறது. ஆண்டின் இந்த இறுதிநாளில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தட்டி வீசிவருகிறது. துபாயில் இன்று அதிகாலையே மழை தன்னுடைய “பணியைத்” துவங்கிவிட்டது.

போலவே ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் தேசிய வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்று இரவு 11 மணிவரையிலும் அமீரகத்தில் மழையானது தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது தேசிய வானிலை ஆய்வுமையம்.

Cloud Seeding எனப்படும் மேக விதைப்பின் காரணமாக இந்த திடீர் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடல் மற்றும் வடகடலோரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் ஷார்ஜா, துபாய் மற்றும் அஜ்மானில் அதிவேகத்தில் காற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணற்புயல் ஏற்படும் வாய்ப்பு அதிகமிருப்பதால் சாலைகள் கண்ணுக்குப் புலப்படுவதில் சிரமம் ஏற்படலாம் எனவும் வாகனவோட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap