அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் மழை பெய்துவருகிறது. குறிப்பாக புஜைரா, மசாஃபி, ஷார்ஜா மற்றும் அஜ்மானின் உட்புறப் பகுதிகளில் கனமழையானது பெய்திருப்பதாக தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
View this post on Instagram
மேலும் ராஸ் அல் கைமா, அல் தைத், அல் மதாம், உம் அல் குவைன் ஆகிய இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று துபாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலமான தூசுப் புயல் வீசியதால் வாகனவோட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அமீரகத்தில் கடந்த சில தினங்களாக அசாதாரண வானிலை நிலவுவதால் மலைப்பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கு செல்வதை வாகனவோட்டிகள் தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
View this post on Instagram
View this post on Instagram