UAE Tamil Web

வீடியோ: அமீரகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை – சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்..!

rain UAE

அமீரகத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இன்று சில இடங்களில் கனமழை பெய்ததாக தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராஸ் அல் கைமா, புஜைரா மற்றும் ஷார்ஜாவின் கிழக்குப் பகுதிகள் சிலவற்றில் மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்திருக்கிறது.

திடீர் வெள்ளம் மற்றும் மழை மேகங்கள் அதிகமாக காணப்படும் இடங்களில் நேரம் செலவிடவேண்டாம் என மக்களை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.


மக்கள் வெளியிட்டுள்ள வீடியோக்களில் சாலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் மழைநீர் வழிந்தோடுவதைப் பார்க்க முடிகிறது.

திப்பா – மஸாஃபி சாலையில் கனமழை பெய்திருக்கிறது. ராஸ் அல் கைமாவில் உள்ள ஷேக் முகமது பின் சயீத் சாலையில் மிதமான மழை பெய்தது. திப்பா மற்றும் புஜைரா ஆகியவற்றின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்திருக்கிறது.

rain UAE
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap