UAE Tamil Web

துபாயில் நடைபெற்ற சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி : கலந்துகொண்டு யோகா செய்த துணைத் தூதர்..!

yoga

ஏழாவது சர்வதேச யோகா தின சிறப்பு நிழ்ச்சி ஔத் மேதாவில் உள்ள இஸ்மாயிலி செண்டரில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய துணைத்தூதர் டாக்டர். அமன் பூரி உட்பட 70 பேர் கலந்துகொண்டு யோகா செய்தனர்.

2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. 5000 வருடம் பழைமையான யோகாசனத்தை உலகளவில் பிரபலப்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார்.

“ஜூன் 21, 2015 ஆம் தேதி முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. அன்று முதல் இதனை உலகம் முழுவதும் எடுத்துச்செல்லவும் யோகாவினால் கிடைக்கும் நன்மைகள் குறைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது” என துணைத் தூதரகம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய துணைத்தூதர் பூரி,”இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்திற்கான மையக்கருத்தாக “வெளிப்புற நெருக்கடிக்கு மத்தியில் உள் வலிமையை உருவாக்குதல்” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யோகா நம் அனைவருக்குமானது, நாம் அனைவரும் யோகாவிற்கானவர்கள். யோகா ஒரு மதம் அல்ல, அது எந்த குறிப்பிட்ட மதத்தையும் சேர்ந்ததாகக் கருதக்கூடாது. இது ஒரு விஞ்ஞானம் – நல்வாழ்வின் அறிவியல், உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்கும் அறிவியல். நமது முழு திறனை உணர்ந்து கொள்ளும் அறிவியல்”

“யோகாவின் அதிகரித்துவரும் புகழ் மற்றும் ஏற்றுக்கொள்ளல் உலகம் முழுவதும் காணப்படுகிறது. யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) யோகாவை மனிதகுலத்தின் கலாச்சார பாரம்பரியமாக நியமித்துள்ளது. இது அதன் உலகளாவிய முக்கியத்துவத்தையும் மனிதகுலத்திற்கு நன்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது”என்றார்.

yoga
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap