UAE Tamil Web

ஏன் வெயில்ல நிக்குறிங்க.. கார்ல.. ஏறுங்க.. குழந்தையுடன் நின்ற இந்தியருக்கு அஜ்மான் போலீஸ் செய்த உதவி – பாராட்டிய இளவரசர்..!

NAT-Indian-father-Ajman-

அமீரகத்தில் 2020 – 21 ஆம் கல்வியாண்டுக்காக பள்ளிகள் சமீபத்தில் திறக்கப்பட்டன. பள்ளி செல்லும் குழந்தைகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் பள்ளிக்கு திரும்பும்போது PCR டெஸ்ட் சான்றிதழுடன் வரவேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அஜ்மானில் உள்ள டெஸ்ட் செண்டருக்கு தனது பெண் குழந்தைகள் இருவர் மற்றும் மனைவியுடன் சனிக்கிழமை டெஸ்ட் எடுக்கச் சென்றிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர். அதிகாலை 5 மணிக்கே இவர்கள் சென்றாலும் அங்கே கூட்டம் வரிசை கட்டி நின்றிருக்கிறது.

பொழுது புலர்ந்து வெயில் பரவத்தொடங்கிய போதும் இவர்களால் டெஸ்ட் எடுக்க முடியவில்லை. பிஞ்சுக் குழந்தைகளுடன் வெளியிலில் நின்றிருந்த குடும்பத்தைப் பார்த்ததும் ரோந்துப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் காரை நிறுத்திவிட்டு அருகே வந்திருக்கின்றனர்.

ஏன் வெயிலில் குழந்தையுடன் நிற்கிறீர்கள்? காரில் ஏறுங்கள் எனச் சொல்லி, காரிலேயே அவர்களுக்கு PCR டெஸ்ட் எடுக்க உதவி செய்திருக்கிறது அஜ்மான் காவல்துறை. இதனை குழந்தையின் தந்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட அது இப்போது வைரலாகியிருக்கிறது.

அஜ்மான் காவல்துறையின் வீடியோவைக் கண்ட அஜ்மான் பட்டத்து இளவரசர் பெருமதிப்பிற்குரிய ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுவைமி அதனை ஷேர் செய்து,  அஜ்மான் காவல்துறைக்கு நன்றி எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காரில் இருந்து குழந்தைகள் கீழே இறங்கியதும் காவல்துறை அதிகாரி ஒருவர் மகிழ்ச்சியாக கையசைத்து வழியனுப்பி வைக்கும் காட்சி பலரது இதயத்திலும் நிலைபெற்றுவிட்டது.

NAT-Indian-father-Ajman-
5 Shares
Share via
Copy link