UAE Tamil Web

விபத்தின்போது தன்னைக் காப்பாற்றிய தம்பதியை நேரில் சந்தித்து யூசுப் அலி கொடுத்த “சர்ப்ரைஸ் கிஃப்ட்”..!

yosuff ali

கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை சந்திக்க குடும்பத்துடன் கேரளா சென்றிருந்தார் லூலூ குழும அதிபர் யூசுப் அலி. தனது வசிப்பிடத்திலிருந்து ஹெலிகாப்படர் மூலமாக பயணிக்கும் போது மழை வலுத்திருக்கிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதனால் யூசுப் அலியின் தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது. பின்னர் அதற்கு அறுவை சிகிச்சையும் அதற்காக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கர விபத்து ஏற்பட்ட அன்று அதாவது ஹெலிகாப்டர் தரையில் மோதி நின்ற சிறிது நேரத்தில் அருகே வசித்து வந்த ராஜேஷ் வேகமாக ஓடிவந்து அனைவரையும் மீட்டிருக்கிறார்.

அவரது மனையும் காவல்துறையில் பணிபுரிபவருமான பிஜி உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவலைத் தெரிவித்து, ஆம்புலன்சை வரச் செய்திருக்கிறார். உண்மையில் ராஜேஷ் மற்றும் அவரது மனைவி பிஜிக்கு ஹெலிகாப்டரில் இருந்தது யூசுப் அலி என்று தெரிந்திருக்கவில்லை.

அடிபட்டவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் இருவரும் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த உதவியை மறவாத யூசுப் அலி, விபத்த் ஏற்பட்ட 8 மாதங்களுக்குப் பிறகு ராஜேஷ் – பிஜி தம்பதியை நேரில் சந்தித்திருக்கிறார்.

செக், இனிப்புகள் கொண்ட Gift Of Love என்னும் பரிசுப் பொருள் தொகுப்பை ராஜேஷிற்கு வழங்கிய யூசுப் அலி தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார். மேலும், ராஜேஷ் வீட்டில் நடைபெற இருக்கும் அவரது சகோதரரின் திருமணத்திற்கு அனைத்துவித உதவியையும் செய்வதாக யூசுப் அலி வாக்களித்திருக்கிறார்.

மேலும் ஹெலிகாப்டர் தரையிறங்கிய இடத்திற்குச் சொந்தக்காரரான பீட்டர் என்பவரையும் அவரது குடும்பத்தோடு சந்தித்திருக்கிறார் யூசுப் அலி.

yosuff ali
12 Shares
Share via
Copy link