UAE Tamil Web

வீடியோ: அந்தரத்தில் மிதந்துவந்த அலாவுதீன் – துபாயில் பரபரப்பு..!

alaudin

மாயாஜால கதாப்பாத்திரங்களில் அலாவுதீனுக்கு எப்போதும் பிரத்யேக இடமுண்டு. உலகம் முழுவதும் வெற்றிநடை போட்ட டிஸ்னி திரைப்படங்களில் அலாவுதீனும் ஒன்று. அப்படி பிரபலமான அலாவுதீன் துபாய் வீதிகளில் வலம் வந்திருக்கிறார். அதுவும் அந்தரத்தில்.

ஆமாம். RhyzOrDie என்னும் பெயரில் யூடியூபில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஹாலோவீன் எனப்படும் மாறுவேடம் அணியும் பண்டிகையை முன்னிட்டு இந்த பிரத்யேக அலாவுதீன் கெட்டப்பை உருவாக்கியதாக அவர் சொல்லியிருக்கிறார்.

இந்த உருவாக்கத்திற்கு 8 மாதங்கள தேவைப்பட்டதாகத் தெரிவிக்கும் அவர்,” உங்களால் கனவுகாண முடியும் என்றால் உங்களால் உருவாக்கவும் முடியும்” என்கிறார்.

புர் துபாய் மற்றும் ஓல்ட் சூக் பகுதியில் தண்ணீரின் மீதும் அந்தரத்தில் அலாவுதீன் பரந்த காட்சியை பலரும் பிரம்மிப்புடன் சமூக வலைத்தளங்களில் பார்த்து வருகின்றனர்.

alaudin
16 Shares
Share via
Copy link