fbpx
29.1 C
Dubai
November 25, 2020
UAE Tamil Web

“அமைதி மற்றும் சகிப்புத்தன்மையை போற்றும் நாடாக அமீரகம் என்றைக்கும் இருக்கும்” : அபுதாபி பட்டத்து இளவரசர் உறுதி..!

Sheikh Mohamed

உலக சகிப்புத்தன்மை நாளான இன்று, அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

“சர்வதேச சகிப்புத்தன்மைக்கான நாளான இன்று, அமைதி மற்றும் ஒளி பொருந்திய அடித்தளத்தை அனைத்து மக்களுக்கும் அமைக்க அமீரகம் உறுதியேற்கிறது. இரக்கம், ஒழுக்கம், மரியாதை ஆகியவற்றின் மூலம் நாம் உலகம் எதிர்கொள்ளும் சவால்களை சந்திக்க முடியும்” என அல் நஹ்யான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை 1996 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 16 ஆம் தேதியை உலக சகிப்புத்தன்மை தினமாக அறிவித்தது. “அமீரகத்தின் மதிப்புகள் மீதான நம்பிக்கையை பறைசாற்றும் விதமாக இன்று சர்வதேச சகிப்புத்தன்மை தினம் கொண்டாடப்படுகிறது” என சகிப்புத்தன்மை மற்றும் சக வாழ்வுத்துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் தெரிவித்திருக்கிறார்.

“அமைச்சகம் அபுதாபியிலிருந்து முழு உலகத்திற்கும் சகிப்புத்தன்மைக்கான அழைப்பை விடுத்துள்ளது. அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் சக வாழ்வுக்கான அழைப்பை முழு உலகிற்கும் அமீரகம் விடுத்துள்ளது” என நஹ்யான் தெரிவித்திருக்கிறார்.

மேலும், அவர் வெளியிட்ட அறிக்கையில்,” அமீரகத்தின் தந்தையான ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் (Sheikh Zayed Bin Sultan Al Nahyan) அவர்களின் பெயரைக் குறிப்பிடாமல் சகிப்புத்தன்மை குறித்து பேச முடியாது. அவர் உலகத்துடன் நேர்மறையான எண்ணங்களுடன் உரையாடினார். சகிப்புத்தன்மை, சக வாழ்வு மற்றும் சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் ஆகியவற்றை அவர் மேலும் உறுதிப்படுத்தினார். அனைவருடனும் கலந்துரையாட வழிவகுக்கும் நம்முடைய மரபுக்கு காரணமாக அமைந்த நம் பாரம்பரியத்தை அவர் பெருமையாகக் கருதினார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



error: Alert: Content is protected !!