UAE Tamil Web

இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதத்தில் துபாய் ஆட்சியாளர் வெளியிட்ட வீடியோ..!

Sheikh-Mohammed-desert-Expo-2020

அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அமீரக இளைஞர்களை உற்சாகமூட்டும் வகையில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

Splashes of Leadership என்னும் தலைப்பில் தலைமைப் பண்புகள் குறித்து துபாய் ஆட்சியாளர் உத்வேகம் அளிக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில் சிறிய செயல்களே பெரிய வெற்றிகளைப் பெற்றுத்தரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“சாதனைகளை நோக்கி பயணிக்க காலம் நம்மை அனுமதிக்கும். புதிய திட்டங்கள் ஆரம்பத்தில் மெதுவாக நடைபெற்றாலும் பின்னாளில் அவை மிகப்பெரியதாக சாதனையாக மாறும். சிறிய திட்டங்கள் அனைத்துமே பெரிய சாதனைகளின் பகுதியே”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

Sheikh-Mohammed-desert-Expo-2020
1 Share
Share via
Copy link