UAE Tamil Web

அமீரகம்: கொட்டித்தீர்த்த செயற்கையாக உருவாக்கப்பட்ட மழை – வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட வீடியோ..!

rain

செயற்கை மழை தொழில்நுட்பமான மேக விதைப்பின் மூலமாக அமீரகத்தின் பல்வேறு எமிரேட்களில் மிதமானது முதல் கனமழை பெய்திருக்கிறது. துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா மற்றும் புஜைரா ஆகிய பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையினை வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறது தேசிய வானிலை ஆய்வுமையம்.

ராஸ் அல் கைமாவின் அல்முனை, வாதி அல் கோர், புஜைராவின் ஒஹாலா, அய்ன் கமோர், ஷார்ஜாவின் கல்பா, தரீஃப் மற்றும் துபாயின் ஹட்டா ஆகிய பகுதிகளில் மழை பெய்திருக்கிறது.

ஷார்ஜாவின் வாதி அல் ஹலோவில் கனமழை பெய்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.


மழை மேகங்களால் இன்று இரவு 7 மணிவரையில் மழை அல்லது குளுமையான காற்று வீசும் எனவும் இதனால் சாலைகள் கண்ணுக்குப் புலப்படுவதில் சிரமம் ஏற்படலாம் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.