UAE Tamil Web

வீடியோ: கனன்று வீசிய வெயிலில் மயக்கமடைந்த இளைஞர் – ஹெலிகாப்டர் மூலமாக மீட்ட அமீரக காவல்துறை..!

HEAT

ராஸ் கைமாவில் கொடும் வெயிலின் தாக்கம் காரணமாக ஷோக்கா மலைப்பகுதியில் மயங்கி விழுந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 21 வயது இளைஞரை தேசிய தேடுதல் மற்றும் மீட்புப் படை மீட்டு, முதலுதவி செய்திருக்கிறது.

அதீத வெயில் காரணமாக மயக்கமடைந்த இளைஞருக்கு உதவி தேவைப்படுவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஹெலிகாப்டர் மூலமாக, சம்பவ இடத்தை அடைந்த மீட்புப் படை, அவருக்கு முதலுதவி செய்து அவரைத் தேற்றியிருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by NSRC UAE (@nsrcuae)

சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோவில், மலைப்பகுதியில் பேரீச்சம்பழ மரக் கிளையினால் செய்யப்பட்ட ஓய்வுப் பகுதியில் படுத்திருந்த, இளைஞருக்கு மீட்புப் படையினர் உதவி செய்வது தெரிகிறது.

அதன்பின்னர், வெயிலினால் பாதிக்கப்பட்டவரை அருகில் உள்ள அல் தைத் மருத்துவமனையில் மீட்புப்படை சேர்த்திருக்கிறது. இந்தப் பணியின்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

HEAT
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap