துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சாகசங்களை மிகவும் விரும்புபவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் உச்சியில் நின்று செல்பி எடுப்பது, ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது ஆகியவற்றை அசால்ட்டாக செய்யும் ஷேக் ஹம்தான் தற்போது புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
துபாயில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய ராட்டினமான துபாய் ஐன்-ன் உச்சியில் கூலாக காபி குடிக்கிறார் துபாய் இளவரசர்.
View this post on Instagram
புளு வாட்டர்ஸ் தீவில் 250 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட ராட்டினத்திற்கு ‘ஐன் துபாய்’ (Ain Dubai) என பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஐ ராட்டினத்தை விட இது 2 மடங்கு பெரியது. ஐன் துபாய் ராட்டினத்தில் ஒரு தடவை சுற்றிவர மட்டுமே 38 நிமிடங்கள் ஆகும். அத்துடன் இந்த ராட்டினத்தில் குளிர்சாதன வசதியுடன் 48 கேபின்கள் உள்ளன.
ஒருமுறை சுமார் 1,750 பயணிகள் ராட்டினத்தில் சுற்றி வரலாம். சிறப்பு கேபின்கள் இரண்டு டபுள் டெக்கர் பேருந்துகளை விட பெரியது எனக் கூறப்படுகிறது. உலகின் மிக உயரமான கோபுரம் என புர்ஜ் கலீஃபா பெயர் பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த ராட்டினம் மூலம் துபாய்க்கு மேலும் ஒரு உலகப் புகழ் கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் 50-வது தேசிய தினத்தை முன்னிட்டு ராட்டினம் திறக்கப்பட இருக்கிறது.
