UAE Tamil Web

துபாய் ஆட்சியாளரின் மாஸ்டர் பிளான்; செயற்கையாக ஏரியையே உருவாக்கவுள்ள துபாய் அரசு..!

hatta-2

அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நேற்று ஹட்டா பகுதியை மேம்படுத்தும் பிரம்மாண்ட திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.

இதன்கீழ், ஹட்டாவில் புதிய சுற்றுலா கடற்கரை, ஏரியை உருவாக்குதல், மலை முகடுகளுக்கிடையே ஃபணிகுலர் எனப்படும் போக்குவரத்து அமைப்பை நிறுவுதல், அமீரகத்தின் மிகப்பெரிய மலைப்பகுதி நடைபாதையை உருவாக்குதல், சைக்கிள் பயணத்திற்கான 120 கிலோமீட்டர் பாதையை அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற இருக்கின்றன.

ஹட்டாவை சுற்றுலாவாசிகளின் சொர்க்க புரியாக மாற்றும் இந்தத் திட்டத்தைக் கண்காணிக்க கமிட்டி ஒன்றையும் துபாய் ஆட்சியாளர் உருவாக்கியுள்ளார். நீண்டகால தொலைநோக்குச் சிந்தனையுடன் அமைக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் துபாயின் சுற்றுலாத்துறையை வேறு உயரத்திற்கு இட்டுச் செல்லும் என்கின்றனர் நிபுணர்கள்.

hatta-2
1 Share
Share via
Copy link