UAE Tamil Web

வீடியோ: அனைத்துத் தடைகளையும் நாங்கள் தகர்த்தெறிவோம் – துபாய் ஆட்சியாளரின் அதிரடி வீடியோ..!

sheikh mohammed

அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை Flashes of Leadership என்ற தலைப்பில் வெளியிடுவது வழக்கம். இதன்காரணமாகவே இவருக்கு இளைஞர்களிடையே ஏகபோக செல்வாக்கு இருக்கிறது.

அமீரகம் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள பலருக்கும் ஷேக் முகமது ஆதர்சமாக உள்ளார் என்றால் அது மிகையில்லை. இந்நிலையில், இந்தத் தொடரில் புதிய வீடியோ ஒன்றினை துபாய் ஆட்சியாளர் வெளியிட்டுள்ளார்.

அதில்,” உங்களுடைய நாடு குறித்த கனவுகள் உங்களுக்குள் இருந்தால் கடினமாக உழையுங்கள். அதுதான் உங்களுடைய பயணத்தைத் துவக்கிவைக்கும். எங்களுக்கு எதிர்காலம் குறித்த சிந்தனையும் தெளிவான திட்டங்களும் எங்களிடத்தில் இருக்கின்றன. தடைகள் எதிர்வரும்; ஆனால் அனைத்து தடைகளையும் அமீரகம் தகர்க்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ துபாய் ஊடக அலுவலகத்தின் வலைத்தளப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கம்போலவே இந்த வீடியோவும் இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

sheikh mohammed
3 Shares
Share via
Copy link