அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தலைமைப்பண்பு குறித்த தமது கருத்துக்களை Flashes of Leadership என்னும் தலைப்பில் வெளியிட்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று துபாய் ஆட்சியாளர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,” எதிர்காலத்தின் தேசமாக அமீரகம் கருதப்படுகிறது. இங்கு வசிக்கும் ஒவ்வொருவரும் அமீரகத்தை நேசிக்கின்றனர். அன்பு மற்றும் ஒத்துழைப்பே அமீரகத்தின் வளர்ச்சிக்குக் காரணம். அமீரகம் உலகளாவிய தேசமில்லை. அமீரகமே ஓர் உலகமாகும்” என துபாய் ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
வீடியோவின் பின்புறத்தில் துபாய் எக்ஸ்போவின் வண்ணமிகு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை இதுவரையில் 36 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.
