UAE Tamil Web

வறண்ட பாலைவனம் Expo2020க்கு பிரம்மாண்டமாக உருவானது எப்படி? – வியக்க வைக்கும் வீடியோ வெளியீடு!

உலகின் பிரம்மாண்டமான கண்காட்சிகளுள் ஒன்றான Expo2020 துபாயில் அடுத்த மாதம் முதல் தொடங்க இருக்கிறது. 6 மாதங்களுக்கு நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் உலக நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வருகை தர இருக்கின்றனர். 6 மாத பிரமாண்ட கண்காட்சியை வெற்றிகரமாக நடத்திட 8 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குழுக்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். 8 ஆண்டு கால உழைப்பை டைம் லேப்ஸ் முறையில் 40 நொடி வீடியோவாக வெளியிட்டு வாய் பிளக்க வைத்துள்ளது கண்காட்சி குழு.

அல் மக்தூம் விமான நிலையம் அருகில் உள்ள சாதாரண பாலைவன நிலப்பரப்பு உலகின் தலைசிறந்த பொறியாளர்கள், கட்டிட கலை வல்லுநர்களால் பிரம்மாண்டமாக சர்வதேச கண்காட்சிக்கு தயாராகி நிற்கும் கட்டிடங்கள் காண்போரை வியக்க வைத்துள்ளது.

19 Shares
Share via
Copy link