உலகின் பிரம்மாண்ட கண்காட்சியான துபாய் எக்ஸ்போ 2020 அக்டோபர் 1 ஆம் தேதி துபாயில் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகளவில் கொரோனாவிற்குப் பிறகு நடைபெறும் மிகவும் பிரம்மாண்ட நிகழ்வு இது என்பதால் உலகமே தற்போது அமீரகத்தை உற்றுநோக்கியுள்ளது.
இதில் சுமார் 192 நாடுகள் தங்களுடைய பெவிலியனை அமைத்துள்ளன. பொருளாதார முன்னேற்றம், புதிய வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதத்தில் ஒவ்வொரு நாடும் உத்வேகத்தோடு இந்த நிகழ்வில் கலந்துகொண்டு வருகின்றன.
அதேபோல, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் துபாய் எக்ஸ்போவைக் கண்டுகளிக்க ஆர்வத்துடன் செல்கின்றனர். இவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இன்று அமீரக – சவூதி இராணுவ விமானங்கள் எக்ஸ்போ சிட்டியை வட்டமடித்து அசத்தின.
வானத்தில் வண்ண வேடிக்கைகளை நிகழ்த்திய இந்த விமான அணிவகுப்பை மக்கள் கண்டு ரசித்தனர்.
Watch the Fursan Knights and Saudi Hawks fly over Expo 2020 Dubai https://t.co/RDzixIbEfX pic.twitter.com/I2598uk9ab
— The National (@TheNationalNews) October 23, 2021
