அமீரகத்தின் கிழக்குப் பகுதியில் கடந்த சில வாரங்களாக திடீர் மழைப்பொழிவு மற்றும் அசாதாரணமான வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் ராஸ் அல் கைமாவில் இன்று திடீரென சூறாவளிக் காற்று உருவானது. இதனால் சாலை சரிவர கண்களுக்கு புலப்படவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சூறாவளிக்காற்றுகள் மிகவும் ஆபத்தானவை எனவும் இது அசாதாரண வானிலை நிலவும் நேரங்களில் தோன்றும், மக்கள் கவனத்துடன் செயல்படவேண்டும் என தேசிய வானிலை ஆய்வுமையம் மக்களை எச்சரித்துள்ளது.
ராஸ் அல் கைமாவின் சே அல் பனா (Seih Al Banah) பகுதியில் இன்று இந்த சூறாவளிக் காற்று சுழன்றடித்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
