UAE Tamil Web

“இனிமே இந்தத் தப்பை செய்யாதீங்க”- போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் ரோஸ் கொடுத்து அறிவுரை சொன்ன அபுதாபி காவல்துறை..!

abudhabi police

அபுதாபி போக்குவரத்துக் காவல்துறை ஹேண்ட் இன் ஹேண்ட் (Hand in Hand) எனப்படும் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. இதன்மூலம் சாலைப்போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், பாதுகாப்பான பயணம் குறித்தும் காவல்துறையினர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.

இதன் நீட்சியாக நேற்று அல் அய்ன் பகுதியில் சாலை விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் மலர் கொடுத்து, அவர்களுடைய தவறு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை கனிவுடன் காவல்துறையினர் எடுத்துரைத்தனர்.

சாலைப் போக்குவரத்து குறித்த துண்டு அறிக்கைகளையும் காவல்துறையினர் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கிவருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய அல் அய்ன் போக்குவரத்துக் காவல் பிரிவின் துணை இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் சைஃப் முகமது அல் அமீரி,” வாகனவோட்டிகளிடையே பாதுகாப்பான பயணம் குறித்தும், சாலை விதிமுறைகளை பின்பற்றுவதன் அத்தியாவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்” என்றார்.

சாலை உபயோகிப்பாளர்கள், பாதசாரிகள் மற்றும் டெலிவரி பணியாளர்களை மதித்து செயல்படவேண்டும் என காவல்துறை வாகனவோட்டிகளை வலியுறுத்தியுள்ளது.

abudhabi police
1 Share
Share via
Copy link