UAE Tamil Web

துபாய்: மார்கெட்டில் கொள்ளை முயற்சி – திருடனைப் பிடித்து வெளுத்து வாங்கிய பொதுமக்கள் – வைரலாகும் வீடியோ..!

Capture

துபாயின் மார்கெட் ஒன்றில் திருடிக்கொண்டு ஓடிய நபரை பொதுமக்கள் பிடித்து அடிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளது.

அருகில் உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மக்கள் சாலையில் நடந்து செல்வது தெரிகிறது. அப்போது, திடீரென திருடன் ஓடிவர, அவரை கால்தடுக்கி விழச் செய்கிறார் ஒருவர். அதன்பின்னர் பொதுமக்கள் திருடனை தாக்குகின்றனர்.

சிசிடிவி பதிவின்படி இந்த சம்பவம் ஏப்ரல் 12 ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது எனத் தெரிகிறது. ஆனால், துபாயின் எந்த இடத்தில் எனத் தகவல் தெரிவிக்கப்படவில்லை.