UAE Tamil Web

வினாடியில் செய்த தவறினால் நிகழ்ந்த பயங்கர விபத்து – காவல்துறை வெளியிட்ட அதிர்ச்சிகர வீடியோ..!

accident

சிக்னலில் சிவப்பு விளக்கில் நிற்காமல் வேகமாகச் சென்ற காரினால் நேர்ந்த மோசமான விபத்து குறித்த வீடியோ ஒன்றினை அபுதாபி காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்துப் பிரிவு இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

வாகனங்களை இயக்கும்போது செல்போன் உபயோகித்தல் போன்ற கவன சிதறல்கள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து வாகனவோட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் சிவப்பு விளக்கில் நிற்காமல் வேகமாகச் சென்ற கார், எதிரே இருந்த காரில் மோதியது மட்டுமல்லாமல் இதனால் அதற்குப் பின்னால் சென்ற வாகனங்களும் மோதலுக்கு உள்ளாகியது பதிவாகியிருக்கிறது.

வாகனவோட்டிகளுக்கான சட்ட எண் (5), 2020ன் படி, சிவப்பு விளக்கில் நிற்காமல் செல்லும் வாகனங்கள் 30 நாட்களுக்கு சிறைபிடிக்கப்படும் எனவும் 1000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் 12 கரும்புள்ளிகள் ஆகியவை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட வாகனத்தினை மீட்க 3 மாதங்களுக்குள் 50,000 திர்ஹம்ஸ் பணத்தினை செலுத்தவேண்டும் எனவும் 6 மாதத்திற்கு உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

accident
0 Shares
Share via
Copy link