அமீரகத்தில் பெய்த கனமழையால் துபாய் மால் மழைநீரால் நிரம்பி வழியும் காணொளி.!

Water enters Dubai Mall after heavy rain in UAE

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் துபாய் மாலில் மழைநீர் உட்புகுந்தது.

ஞாயிற்றுக்கிழமை இன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக பல பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து கொண்டது. இந்நிலையில் துபாய் மாலிலும் மழைநீர் புகுந்து தரைப்பகுதி ஒரு குளம் போல் காட்சியளித்தது.

துபாய் மாலில் மழைநீர் உட்புகுந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனை தொடர்ந்து துப்புரவாளர்கள் கடைகளுக்குள் தண்ணீர் வருவதைத் தடுக்க தொடர் முயற்சியில் ஈடுபட்டனர்.